
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மருந்துகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் அவ் மருந்துகளை அஞ்சல் திணைக்களத்தினூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நோயாளர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் தங்களது கிளினிக் இலக்கத்துடன் கிளினிக் தொடர்பான விபரங்கள் அத்துடன் தங்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்திய நிபுணரது பெயர் என்பவற்றை வழங்கி உங்களது மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி கணேசலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதற்காக நீங்கள் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை எமது வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கமான 065-3133330, 065-3133331 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உங்களது மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.





