DSC 0242 resizedகொரோனா தடுப்பு நடவடிக்கையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரண உணவுப்பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் வழங்கி வைத்தார்.

 

இதற்கமைய அம்கோர் நிறுவனத்தின் அணுசரணையில் இந்த நிவாரண உணவுப்பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.கொரோனா அனர்த்த நிலமையில் அற்பணிப்பு மிகுந்த சேவை மதிக்கப்படவேண்டும் என்ற நல்நோக்குடன் இப்பணியினை அரசாங்க அதிபர் முன்நின்று செயற்படுத்தியமை பாராட்டுக்குரியது.

இந்நிகழ்வில் மாவட்ட உதவிச்செயலாளர் திரு ஏ.நவேஸ்வரன், மாவட்ட அரச ஊடக அதிகாரி வடிவேல் ஜீவானந்தம் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

DSC 0234 resized DSC 0236 resized DSC 0239 resized DSC 0242 resized

DSC 0243 resized DSC 0245 resized DSC 0248 resized