DSC 1073 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகளான புளுக்குணாவி குளத்து நீரை நம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நீர் பற்றாக்குறை தொடர்பாக கடந்தவாரம் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களிடம் முறையிட்டதையடுத்து அரசாங்க அதிபரின் தீவிர முயற்சியினால் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உரையாடியதைத் தொடர்ந்து சேனநாயக சமுத்திரத்தில் இருந்து நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புளுக்குணாவி குளத்து நீரை நம்பி விவசாய செய்கை பண்ணப்படவேண்டிய 2980 ஏக்கருக்கான அனுமதி மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக 500 ஏக்கர்கள் மேலதிகமாக செய்கை பண்ணப்பட்டதினால் குளத்தில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீர் போதுமானதாக இல்லாத காரணத்தினால் மாவட்டத்தில் உள்ள நவகிரி குளத்து நீரை பாவிப்பது தொடர்பாக மத்திய நீர்ப்பாசண திணைக்களத்துடன் உரையாடியபோது பிரதிப்பணிப்பாளர் திரு எம்.வி.எம்.அசார் நவகிரி விவசாயிகளுக்கு போதுமான நீர்மாத்திரம் தங்களிடம் உள்ளதினால் புளுக்குணாவி விவசாயிகளுக்கு வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக நீர் கடன்பெற்று விவசாயிகளின் விளைநிங்களை காப்பாற்றிய பெருமைக்குரியவர் எமது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா என இன்று விவசாய அமைப்புக்கள் பாராட்டி புகழ்ந்தனர். வரலாற்றில் என்றும் நடைபெறாத ஒரு திட்டம் எம்மக்களுக்காக செயல்வடிவம் பெறவுள்ளமை சிறப்புக்குரிய விடயமாகும். அந்தவகையில் அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தில் இருந்து நவகிரிக்கும் அங்கிருந்து ஆற்றுப்பாச்சல் ஊடாக 47ம் 49ம் 51ம் 52ம் மற்றும் கடுக்காமுனை 3ம் 4ம் வாய்கால் மூலம் புளுக்குணாவிக்கு நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பட்டிருப்பு நீர்ப்பாசன பொறியலாளர் எஸ்.சுபாகரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திரம் புனரமைக்கப்படும் போது 1956ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாதான உடன்படிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு நவகிரிக்கு நீர்தேவை ஏற்படும் போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நீர் வழங்குவதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது அதனை இம்முறைதான் 1956ம் ஆண்டுக்குப்பிறகு நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
05.05.2020 அன்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேடகூட்டத்தில் அரசாங்க அதிபர், மத்திய பிரதி நீர்ப்பாசன பிரதிப்பணிப்பாளர், மாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் வி.இராஜகோபாலசிங்கம், மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி, பட்டிப்பளை பிரதேச செயலாளர் டி.தட்னகௌரி, நவகிரி பிரதேச நீர்பாசன பொறியலாளர் எம்.பத்மதாசன், விவசாயிகள் என பலரும் கலந்துகொன்டனர். 

DSC 1052 resized DSC 1060 resized DSC 1062 resized DSC 1081 resized