
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் புளுக்குணாவி குளத்தினை 05.05.2020 அன்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையிலான நீர்ப்பாசன திணைக்கள பிரதி பணிப்பாளர் வி.இராஜகோபாலசிங்கம், பட்டிப்பளை பிரதேச செயலாளர் குழுவினர் பார்வையிட்டனர்.
புளுக்குணாவி குளத்தினை ஆழப்படுத்தி அதிகளவான நீரைசேகரிக்க திட்டமிடப்படவுள்ளதாகவும் இதன் மூலமாக அதிகளவான விவசாயிகள் நன்மை அடைவார்கள் எனவும் இதற்கான நிதியினை அரசிடம் இருந்து கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இக்குளத்தில் 32அடி நீரை தேக்கி வைக்ககூடிய கொள்ளளவு கொன்டது இந்த புளுக்குணாவி குளமாகும் தற்போது 12 அடி நீர் குளத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது புளுக்குணாவி குளத்தினை எதிர்பாத்து விவசாயத்தில் ஈடுபட்டவர்களின் நீர் தேவையினை பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்பதனால் இக்குளத்தினை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக 2980 ஏக்கர்கள் மாத்திரமே விவசாயம் செய்யக்கூடியதாக உள்ளது. வாய்க்கால்கள் அணைக்கட்டுகள் போன்றவற்றை புனர் அமைப்பதன் ஊடாக மேலும் பல ஏக்கர் விவசாயம் செய்யலாம் எனவும் விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி நீரை வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.






