DSC 0730 resized

உள்நாட்டு விவசாயத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க எதிர்காலத்தில் இலவச மானியம், இலவச உள்ளீடுகள், விவசாய ஏற்றுமதி கிராமங்கள் உருவாக்குதல் மற்றும் ஏனைய உற்பத்தி உதவிகளை வழங்குவதற்கு மாவட்ட மட்டத்தில் புதிய தரவுகளை சேகரிக்க விவசாய திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், விவசாய விரிவாக்கல் திணைக்களம் ஆகியவற்றால் தற்பொழுது மாவட்ட மட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த புதிய தரவுதிரட்டல் மூலமே அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் வழிகாட்டல் மூலம் மாவட்டம், மாகாணம் மற்றும் தேசிய ரீதியில் உணவு உற்பத்தி திட்டங்கள் வகுக்கப்படவுள்ளதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் திரு வை. இக்பால் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்களை தயார்படுத்தும் விஷேட கூட்டம் 02.06.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட விவசாய பணிப்பாளர் திரு வை.இக்பால், மாவட்ட பணிமனை தலைமையக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

DSC 0729 resized DSC 0730 resized DSC 0731 resized DSC 0732 resized

DSC 0734 resized DSC 0737 resized DSC 0741 resized