DSC 0987 resized

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒன்றியம், நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமேரிக்க நாட்டின் உதவியில் மாவட்ட மட்டத்தில் புதிய திட்டங்களை அமுல்படுத்தவுள்ளது. பதவியிலிருக்கும் அரசாங்கம் விரும்புகின்ற நல்லிணக்கம், சகவாழ்வு, சமூக அபிவிருத்தி போன்ற திட்டங்களை கிராம மட்டத்தில் அமுல்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இதற்கமைய மாவட்ட ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் செயல்படும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஊடாக இந்த சகவாழ்வு நல்லிணக்கத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த விசேட திட்டதின்கீழ் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் வழிகாட்டுதலில் கிழக்கு மாகாண சமாதானத்திற்கான மக்கள் ஒன்றியம், கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச மட்டத்தில் புதிய திட்டங்கள் அமுல்படுத்தப் படவுள்ளன.இந்த நடவடிக்கைக்கமைய இந்தத் திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தும் பொருட்டு இம்மாவட்டத்தில் கடமை புரியும் 14 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலுமுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்களை அறிவூட்டல் செய்யும் விசேட செயலமர்வு 23.06.2020 அன்று  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்ட செயலாளர். ஏ. நவேஸ்வரன், ஐ.எஸ்.டீ சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி. எம்.எஸ். சபீக்கா, கிழக்கு மாகாண சமாதான ஒன்றியத்தின் இணைப்பாளர் பீ. தயாபரன், கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் இணைப்பாளர் வடிவேல்.ரமேஸ்ஆனந்தன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் பீ. மயூரதன், சிறுவர் சிகிச்சை வைத்திய நிபுணர் விஸ்னு சிவபாதம் உட்பட பல வளவாளர்களும் கலந்து கொண்டு சமூக அபிவிருத்தி நல்லிணக்கம், சகவாழ்வு பற்றி அறிவூட்டல்களை வழங்கினர்.

DSC 0966 resized DSC 0969 resized DSC 0971 resized DSC 0975 resized

DSC 0980 resized DSC 0982 resized DSC 0985 resized DSC 0990 resized

DSC 0987 resized DSC 0991 resized DSC 0995 resized DSC 0998 resized