bb293572 e4b5 4a25 8286 64c52c24ff3e resized

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தொழில் வழங்குனர்களுக்கு மத்திய வங்கியின் வழிகாட்டுதலில் சலுகைக் கடன் வசதிகளை வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளார். இச்சலுகைக் கடன்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்கள் எமது மாவட்டத்தில் தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் மட்டக்களப்பு நகரில் நவீன ஆடை விற்பனை நிலையமொன்றைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்.

நிலையத்தின் தலைவர் திரு. எம். சபீக் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்புவிழா நிகழ்வில் அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நவீன ஆடையகமொன்று இங்கு திறந்து வைக்கப்படுவதன் மூலம் மாவட்ட மக்கள் தமது ஆடைத் தெரிவுகளை இலகுவாக தெரிவு செய்ய வாய்ப்பிருக்கின்றது. இந்த நல்ல முயற்சிக்கு நிருவாகத்தினரை வாழ்த்துவதுடன் மேலும் எதிர் காலத்தில் தொழில் விருத்தி ஏற்பட இறைவனைப் பிராத்திக்கின்றேன். இந்த ஆடையகத்தின் மூலம் இம்மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழிவாய்ப்பு வசதி கிடைப்பதும் பாராட்டத்தக்கது எனத் தெரிவித்தார்.

இத்திறப்புவிழா நிகழ்வில் மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் திரு.எம். செல்வராசா, மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத் தலைவர் அல்ஹாஜ் எம். சியாம், உட்பட வர்தகர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

5e56df9d f7e1 4697 8e4f ecba11372257 resized 6ad1507f a185 4722 bd5f 66086ec234a7 resized 7e5b8f7a 4f25 4a6f a650 676661485a2f resized 735a0220 33b7 4ec4 8072 8734add176fa resized

b6d71a92 6d7b 4bb9 86e8 7e2093ee153c resized bb293572 e4b5 4a25 8286 64c52c24ff3e resized 2df3dd73 0d3d 4130 8f1a aa0e43fd52c8 resized