
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாவனைக்கு உதவாத பொருட்கள் பகிரங்க ஏலவிற்பனை 25.06.2020 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக வழாகத்தில் மாவட்ட செயலக கணக்காளர் திரு.எம்.வினோத் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஏல விற்பனையானது பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர் பொதுமக்கள், வியாபாரிகள், அலுவலகர்கள் என பலரும் கலந்து கொண்டு பொருட்கள் கொள்வனவில் ஆர்வம் காட்டியதையும் அங்கு காணப்பட்ட அலுவலக பாவனைக்கு உதவாத பல பொருட்களை பொதுமக்களும் வியாபாரிகளும் கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.
மாவட்ட செயலகத்தில் பல காலமாக அலுவலக கலஞ்சியசாலையில் கிடப்பில் கிடந்தவைகளை இன்று ஏலம் இடப்பட்டு பொருட்கள் யாவும் வெளியேற்றப்பட்டிருந்தது. ஆரசாங்கத்தின் நிதிப்பிரமாணங்களுக்கும், சுற்று நிரூபங்களுக்கும் அமைவாக இப் பகிரங்க ஏல விற்பனை இடம்பெற்றது.







