
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வெளிநாட்டு நிதி உதவியுடனான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 09.07.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இம்மாவட்டத்திற்கென மத்திய அமைச்சுக்களினாலும், கிழக்கு மாகாண சபையினாலும் வெளிநாட்டு நிதி புலங்களினால் அபிவிருத்தி செய்வதற்கென திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக குறித்த திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இம்மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக இங்கு விளக்கமளித்தனர்.
இதன்போது மத்திய அமைச்சுக்களின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற வெளிநாட்டு நிதி உதவியிலான வேலைத்திட்டங்களான வீதி அபிவிருத்தித் திட்டங்கள், காலநிலைக்கமைவான மேம்பாட்டுத் திட்டங்கள், உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் நீர்ப்பாசன முறை அபிவிருத்தித் திட்டம், ஐரோப்பிய ஒன்றிய வீட்டுத் திட்டம், ஐ-ரோட் திட்டம் மற்றும் முன்தானையாறு ஆற்றுப் படுக்கை அபிவிருத்தித்திட்டம் போன்றவற்றுடன் கிழக்கு மாகாண சபையினால் அமுல்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி உதவியிலான வேலைத்திட்டங்களான விவசாயப் பிரிவு நவீன மயமாக்கல் திட்டம், காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாயத்திட்டம், மாகாண வீதித் திட்டம், கிராமப்புர முயற்சிகள் அபிவிருத்தித் திட்டம், அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை, இரண்டாம் நிலை நகரங்கள் நிலையான அபிவிருத்தித் திட்டம், கிராமப் புற பாலங்கள் அமைக்கும் திட்டம், ஒருங்கிணைந்த நீர்நிலை மற்றும் நீர் வழ முகாமைத்துவத் திட்டம் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக முன்னேற்ற மீளாய்வு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.







