
பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ணர் கோவில் புனருத்தாரண திருப்பணிகள் தொடர்பான விபரங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர்கள் மாநாடு 12.07.2020 அன்று காலை 11 மணியளவில் ஸ்ரீ ராமகிருஸ்ண மிஸன் மட்டக்களப்பு கல்லடியில் பொது முகாமையாளர் சுவாமி தக்ஸயானந்தா தலைமையிலும், உதவிப்பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தருடன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது.
ராமகிருஸ்ண மிஸன் இலங்கை கிளையானது சுவாமி விபுலானந்தரின் காலத்தில் மிகவும் அரிய நிலையமாக ஆரம்பிக்கப்பட்டதுடன் 26 பாடசாலைகளையும் இலங்கையில் எல்லாப்பாகங்களிலும் நிறுவினார். அவைகள் தான் இன்று பலவிதமான கல்விச் செயற்பாடுகளையும் ஒழுக்க விழுமியங்களையும் பரப்பிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று உலக நாடுகளில் 24க்கு மேற்ப்பட்ட நாடுகளில் 260க்கு மேற்ப்பட்ட கிளைகளை நிறுவி ராமகிருஸ்ண மிஸன்கள் மற்றும் மடங்கள் சிறந்த ஆன்மீகப்பணியினை செய்து வருகின்றது. இப்பணிகளுக்காக இரண்டாயிரத்திற்கும் அதிகமான துறவிகள் மக்களுக்கான ஆன்மீக பயிற்சிகளையும், சொற்பொழிவுகளையும், தியானத்தினையும் நல்கி வருகின்றதாகவும் சுவாமிகள் குறிப்பிட்டனர்.
மட்டக்களப்பு கல்லடியில் இயங்கிவருகின்ற மிஸன் மாணவர்களுக்கான கல்வியும் ஆன்மீகத்தினையும் போதித்துவந்தது தற்போது மக்களுக்கான ஆன்மீகப்பணியினையும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.நூறு ஆண்டுகளைக்கடந்த வரலாற்றை கொண்டது இந்த மிஸன் இங்கு அமைந்துள்ள கோயில் அறுபது ஆண்டுகளுக்குப்பின்னர் புணரமைக்க ஸ்ரீ ராமகிருஸ்ணர் அருள்பாலித்துள்ளார். கடந்த காலத்தில் 150பேர் மாத்திரம் தியானம் செய்யும் அளவுதான் இருந்தது. தற்போது புதிதாக அமைக்கப்பட்டுக்கொன்டிருக்கின்ற கோவிலானது 500பேர் தியானங்கள், வழிபாடுகளை செய்யும் வகையில் அமைக்கவுள்ளோம். அனைத்து அடியார்களும் ஸ்ரீ ராமகிருஸ்ண பகவானின் கோவில் சிறக்க தங்களால் முடிந்த காணிக்கைகளை வழங்கி உதவுமாறும் சுவாமிகள் வேண்டுகோள் விடுத்தார்.







