
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் 10 அம்ச கொள்கைகள் அடங்கிய தேசிய கொள்கைகள் சட்ட திட்டத்திற்கு அமைவாக சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் கீழ் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டினூடாக துடிப்பான தேசத்தை உருவாக்குவது தொடர்பான செயலமர்வு 09.02.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அரச அதிபர் உரையாற்றுகையில் சகல அரச உத்தியோகத்தர்களும் ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கிய தேசிய கொள்கைகள் சட்ட திட்டத்தை நன்கு விளங்கிக்கொள்வதுடன் எதிர்வரும் காலங்களில் இத் தேசிய கொள்கைகளுக்கமைய தங்களுடைய கடமைகளில் ஈடுபடவேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில் சகல விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்களும் பொறுப்புடன் செயற்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய விளையாட்டுத்துறையை மேம்படுத்த வேண்டும் எனவும் உரையாற்றினார்.
இந் நிகழ்வில் காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு. வீ. குகதாசன், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ஐ. ஆதம்லெப்பை மற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.






