
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியை சேர்ந்த திரு சிங்கநாயகம் குலதீபன் அவர்கள் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிதி) பதவிக்கான நியமனத்தினை கிழக்கு மாகாண கௌரவ ஆளுனரிடமிருந்து அண்மையில் பெற்று தனது கடமைகளை கடந்த 02/08/2021ம் திகதி ஆரம்பித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் வரலாற்றில் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகவும் இலங்கை கணக்காளர் சேவையின் விசேட தரத்தினைப் பெற்று நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகவும் கருதப்படுகின்றது, மேலும் இவர் இலங்கை கணக்காளர் சேவையில் 1992ம் ஆண்டு நடாத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையை ஆரம்பித்து பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கணக்காளராகவும் சுகாதார அமைச்சு கொழும்பில் பணிப்பாளர்(நிதி) யாகவும் கல்வியமைச்சில் பிரதம கணக்காளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கையில் இவ்வாண்டு கணக்காளர் சேவையின் விசேட தரத்தினை பெற்றுக் கொண்ட இவர் மருந்து உற்பத்தியாக்கல், விநியோகித்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சு கொழும்பில் பிரதான நிதி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டார். இவ்வேளையில் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்(நிதி) வெற்றிடமேற்பட்டதனால் இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்/ சிவானந்தா, மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலைகளின் பழைய மாணவரான இவர் யாழ்ப்பாண பல்கலைக்களக வியாபார நிர்வாகமானி சிறப்பு பட்டத்தையும், வியாபார நிர்வாகத்தில் முதுமானி பட்டத்தையும் பெற்றுள்ளார்.






