WhatsApp Image 2021 12 31 at 12.37.30

சர்வதேச விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை மேற்கு விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் "விவசாயப் புரட்சியாளர்கள்" எனும் நாமம் சூட்டி மூத்த முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வு வவுணதீவு உழவர் சந்தியில் இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் திரு.ஆர். குணாநிதி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.கே.கருணாகரன் அவர்கள் , மண்முனைமேற்கு பிரதேச செயலாளர் திரு.எஸ்.சுதாகர், விதை நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலைய பிரதி விவசாய பணிப்பாளர் திரு.ஆர்.சிவனேசன், உறுகாம நீர்பாசன திட்ட பொறியியலாளர் திரு.ஏ.விஸ்ணுரூபன், வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி.எஸ். பிரியங்கர  மற்றும்  பட்டிருப்பு, கல்குடா மட்டக்களப்பு  பிரதேச தமிழ் விவசாயிகள் அமைப்பினர், கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதிநிதிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், இதன்போது 12 மூத்த முன்னோடி விவசாயிகளுக்கு  பொன்னாடை போர்த்தி மகுடம் அணிவித்து நினைவுப் பரிசில்களும்  அதிதிகளால் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மாவட்டத்தில் இடம்பெற்ற சர்வதேச விவசாயிகள் தினக் கொண்டாட்டங்களில் வரலாற்றில் முதல் தடவையாக மூத்த முன்னோடி விவசாயிகள் கெளரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2021 12 31 at 12.37.32 1 WhatsApp Image 2021 12 31 at 12.37.31 WhatsApp Image 2021 12 31 at 12.37.31 1

WhatsApp Image 2021 12 31 at 12.37.30 WhatsApp Image 2021 12 31 at 12.37.31 2