
மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி இறைவணக்கம் இடம்பெற்றது.
மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் கொட்டும் மழையில் கடமைகளைப் பொறுப்பேற்று சத்தியப்பிரமாணம் மேற்கொண்டனர்.
இந் நிகழ்வின் போது அரசாங்க அதிபரினால் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் பத்து அம்ச கொள்கையினை நினைவு கூர்ந்ததுடன், கொவிட் தோற்று காலத்திலும் அவதானமாகவும் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
சத்திய பிரமாண நிகழ்வின் போது பயன் தரு மரங்கள் வழங்கப்பட்டதுடன் உத்தியோத்தர்களிடையே அறிமுக பரிசு பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.







