
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சேதனபசளை விநியோகம் தொடர்பான மாவட்ட மட்ட குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 29.03.2022 ஆம் திகதி நடைபெற்றது.
சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உணவு, வளமான தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக அரசினால் முன்னெடுத்துள்ள சேதன பசளை உற்பத்தியின் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள சேதன பசளை தொடர்பான கலந்துரையாடல் 29.03.2022 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 ஆயிரம் ஹேக்டயர் ஏக்கரில் மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக பயிர்செய்கைக்கான சேதனப்பசளை உரத்தினை எவ்வாறு விநியோகிக்க முடியும் என்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்பதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கான உரத்தினை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரணசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர் கம்பன்வில, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், பசுமை உற்பத்தி செயலணியின் மாவட்ட இணைப்பாளரும் 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார, இராணுவ அதிகாரிகள், மாகாண மற்றும் மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர்கள், உரக்கூட்டுத்தாபன அதிகாரிகள், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட அரச திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.







