WhatsApp Image 2022 03 30 at 10.36.37

பசுமை தேசம் விவசாய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் 29.03.2022 அன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இந்நிகழ்வானது மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தும்பாலை பகுதியில் 29.03.2022 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

தேசிய கொடியேற்றியதனையடுத்து பயன்தரு மரங்கள் அதிதிகளினால் நடப்பட்டதன் பின்னர் வீட்டுத்தோட்ட பயிர்களும் நடப்பட்டது. அதனையடுத்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு பயன்தரு மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் செல்வி.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள்  கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2022 03 30 at 10.36.36 WhatsApp Image 2022 03 30 at 10.36.43 WhatsApp Image 2022 03 30 at 10.36.40

WhatsApp Image 2022 03 30 at 10.36.37 WhatsApp Image 2022 03 30 at 10.36.41 WhatsApp Image 2022 03 30 at 10.36.39

WhatsApp Image 2022 03 30 at 10.36.41 1 WhatsApp Image 2022 03 30 at 10.36.42