அகில இலங்கை  ரீதியிலான 45வது கடற்கரை கபடி விளையாட்டுப் போட்டியில்  மட்டக்களப்பு  மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கோறளைப்பற்று  தெற்கு பிரதேச  செயலகத்தின் கிரான் கருணா ஜக்கிய விளையாட்டு கழகத்தின் வீராங்கனைகள் முதலாம் இடத்தினைப் பெற்று மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக்   கொடுத்தமை  குறிப்பிடத்தக்கது.

கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரவீராங்கனைகளை வரவேற்கும் நிகழ்வு 01/07/2019 அன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் முன்னால் பிரதி அமைச்சர் திரு.வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் கலந்து உரையாற்றினார். சகல வீராங்கனைகளும் தேசிய ரீதியில் உலகத்தில் சிறந்த வீராங்கனைகளாக திகழவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து அரசாங்க அதிபர். திரு.மா.உதயகுமார் அவர்கள் உரையாற்றுகையில் மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தினை பெற்றுக் கொடுத்த வீரவிராங்கனைகள் பாராட்டப்படவேண்டியவர்கள் எனவும், நமது மாவட்டத்தில் உள்ள வீரவிராங்கள்களை சிறந்த பயிற்றுவிப்பாளர்கள் மூலமாக வெளிக்கொண்டுவர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இன் நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி சிறிகாந், பிரதம கணக்காளர் திரு.க.ஜேகதீஸ்வரன் ,மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி.முகுந்தன் நவரூபரஞ்சிணி மற்றும் உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன் அத்தோடு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர் .

விளையாட்டு வீராங்கனைகளான ஆ.கஜேந்தி, எஸ்.கோகுலவாணி, யூ.இந்திக்கா, ரீ.சோபினி, எம்.கோகலிக்கா, எஸ்.யதுஸ்திக்கா ஆகியோருக்கான பயிற்றுவிப்பாளரான திரு.மதன்சிங்க ஆகியோருடன் மண்முனை வடக்கு பிரதேசசெயலக பிரிவின் விளையாட்டு அணியினர் ஆண்கள் பிரிவினர் இரண்டாம் இடத்தினை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது

.DSC 0765 Copy FILEminimizerDSC 0774 Copy FILEminimizerDSC 0808 FILEminimizer

DSC 0781 FILEminimizerDSC 0748 Copy 2 FILEminimizerDSC 0752 FILEminimizer