
பிரதமரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் 05 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
தற்போதைய சூழ்நிலையில் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினையைத்தொடர்ந்து மாவட்டத்தின் உணவு சமநிலை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பாக உலக உணவு திட்டம், யுனிசெப் மற்றும் உலக விவசாய ஸ்தாபன ஆகியவற்றின் உயரதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் குறித்த கலந்துரையாடலானது இடம்பெற்றுள்ளது.
தற்போதைய நிலையில் மாவட்டத்தின் உணவு சமநிலை தொடர்பான தரவுகள், அறிக்கைகள் என்பன தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், அவை தொடர்பான விபரங்களை சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தெரிவித்தனர்.
உலக விவசாய ஸ்தாபனத்தின் சார்பில் கிறிஸ்டினா, உலக உணவு திட்டம் சார்பில் சூசானா மரினோ, யுனிசெப் சார்பில் சுதர்மன் மற்றும் உணவு போசாக்கு நிபுணர் வந்தனா அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலின்போது மாவட்ட திட்டமிடல் பணிப்பளார் திருமதி .சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் திரு.நவேஸ்வரன், விவசாய பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஜதீஸ்குமார் வைத்தியர்கள் மற்றும் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






