WhatsApp Image 2022 08 19 at 11.54.08 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றிவரும் அரச அலுவலர்களுக்கான அரசியல் யாப்பு திருத்தம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முழுநாள் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை 20 ஆம்  திகதி கல்லடி கிரீன் காடன் தனியார் விடுதியில் இடம்பெற்றது.

 

இலங்கை சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையினால் நாடாத்தப்பட்ட இந்நிகழ்வு சர்வமத பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திரு. ஆர்.மனோகரன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் திரு.என்.பாசுதேவன், சர்வமத பேரவையின் மாவட்ட உதவி இணைப்பாளர் எச்.ஏ.எம். ஹமீட் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், நிகழ்விற்கு வளவாளராக பேராதனைப் பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்திற்கான சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ரமேஷ் இராமசாமி கலந்து கொண்டு அரசியல் யாப்பு (19 - 22) திருத்தம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலகம் உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு

அரசியல் யாப்பு திருத்தத்தின் அவசியம் அதன் முக்கியத்துவம் மற்றும் மனித உரிமைகள் என்பன தொடர்பாகவும் விரிவாக தெளிவூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 08 19 at 11.54.08 PM 1 WhatsApp Image 2022 08 19 at 11.54.09 PM WhatsApp Image 2022 08 19 at 11.54.09 PM 1 WhatsApp Image 2022 08 19 at 11.54.11 PM