
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் 05.09.2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுகளினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் கடமைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.போதைப்பொருள் பாவனையின் தாக்கத்தினை எமது பிரதேசங்களில் குறைப்பதற்கும் அதிலிருந்து இளைய சமுதாயம் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பதற்கும் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையினை முன்னெடுப்பது மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் கட்டுப்பாட்டு இணைப்பாளர் ப.தினேஷ் மற்றும் மாவட்ட உலவளவாளர் ஜனார்தனி நரசிம்மன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






