WhatsApp Image 2022 09 10 at 08.23.40

மனிதவலு மேம்பாட்டு திணைக்களதின் அனுசரணையோடு மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தின் மனிதவலு மேம்பாட்டு பிரிவினரின் ஏற்பாட்டில் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான மாபெரும் தொழில் சந்தை 12.09.2022 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லுரி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

 

மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளைச்சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் இவ் மாபெரும் தொழில் சந்தையில் கலந்து கொண்டிருந்ததுடன், தொழில் தேடுனர்களுக்கான வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்ததுடன், சுயதொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு சிறந்த வழியினை உருவாக்குவதற்கும்   மற்றும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு இத்தொழில் சந்தை பாரிய பங்களிப்பை செய்திருந்தது. இருபதுக்கு   மேற்பட்ட   தொழில் வழங்கும் தனியார் நிறுவனங்கள் 500க்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புகளுடன் தகுதியானவர்களை நேர்முக பரிட்சையினுடாக தேர்ந்தெடுப்பதற்காக வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வின்போது உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன், மனிதவள அபிவிருத்தி  மாவட்ட இணைப்பாளர் பூ.தெய்வேந்திரகுமாரி, தொழில் சந்தை நிகழ்வின் இணைப்பாளர் மைக்கல் கொலின்  மற்றும் மேலும் பல தொழில்சார் நிபுணர்களும் இதன்போது கலந்துகொண்டுள்ளனர்.

WhatsApp Image 2022 09 10 at 08.23.40 WhatsApp Image 2022 09 10 at 08.23.40 1 WhatsApp Image 2022 09 10 at 08.23.41 WhatsApp Image 2022 09 10 at 08.23.41 1

WhatsApp Image 2022 09 10 at 08.23.46 1 WhatsApp Image 2022 09 10 at 08.23.46 WhatsApp Image 2022 09 10 at 08.23.43 WhatsApp Image 2022 09 10 at 08.23.44