WhatsApp Image 2022 09 10 at 23.02.44

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடத்திய எழுத்தாற்றல் மேம்பாட்டு கூடல் 10.09.2022 அன்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இவ் எழுத்தாளர் மேம்பாட்டுக் கூடலில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென் மேற்குப் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 60 எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர்.நிகழ்வின் இறுதியில் இக்கலைஞர்களுக்கான சான்றிதழ்களை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள்  வழங்கி வைத்தார்.அத்தோடு நிகழ்வின் முக்கிய அம்சமாக எழுத்தாளர்களின் பெருமை கூறும் ஆவணப்படமும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 09 10 at 23.02.39 WhatsApp Image 2022 09 10 at 23.02.39 1 WhatsApp Image 2022 09 10 at 23.02.40 WhatsApp Image 2022 09 10 at 23.02.40 1

WhatsApp Image 2022 09 10 at 23.02.41 WhatsApp Image 2022 09 10 at 23.02.43