
போதையற்ற நாடு - சௌபாக்கியமான தேசம் எனும் தொனிப்பொருளில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுசபையின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் 05.09.2022 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனைஇ விற்பனை மற்றும் உற்பத்தி சம்பந்தமான முறைப்பாடுகள் தொடர்பாக தொடர்புகொள்ள வேண்டிய நிறுவனங்களின் தொடர்பு இலக்கப்பதாதையை அரசாங்க அதிபரினால் மாவட்ட செயலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளின் தொலைபேசி இலக்க பதாதைகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வின்போது ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாத நிறைவு வரை பொலிஸ், மதுவரி திணைக்களம், விசேட அதிரடிப்படையினர், விமோச்சனா, சமுதாய சீர்திருத்த திணைக்களம் மற்றும் உளவளத்துறையினரினால் மாவட்டத்தில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், வைத்திய அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட போதைப்பொருள் கட்டுப்பாட்டு இணைப்பாளர் ப.தினேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் பரிமாரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







