WhatsApp Image 2022 09 21 at 21.19.11

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக கல்வி பொது சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர கல்வியை தொடர்கின்ற மாணவர்களுக்கான கல்விக்கான ஊக்குவிப்பு சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி பயனாளிகளின் பாடசாலை மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புக்காக சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளின் சமுர்த்தி பயனாளிகளின் 2790   பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புக்காக 10 கோடியே நான்கு இலட்சத்தி நாற்பதாயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி வங்கி கிளைகள் ஊடாக தெரிவு செய்யப்பட சமுர்த்தி உதவிபெறும் பயனாளிகளில் 250 பாடசாலை மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில் கல்விக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 90 இலட்சம் ரூபா நிதி வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்கள் கலந்துகொண்டதுடன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மாவட்ட செயலக சமுர்த்தி கணக்காளர் எஸ்.எம்.பஸீர்இ  சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் பிறைசூடிஇ பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதர்சன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பரமலிங்கம்,   சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

WhatsApp Image 2022 09 21 at 21.19.11 WhatsApp Image 2022 09 21 at 21.19.13 WhatsApp Image 2022 09 21 at 21.19.13 1 WhatsApp Image 2022 09 21 at 21.19.16

WhatsApp Image 2022 09 21 at 21.19.17 WhatsApp Image 2022 09 21 at 21.19.26