
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளிகளுக்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு உலக வங்கியின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக மாவட்டத்தில் உள்ள 260 முன்பள்ளிகளுக்கு குடிநீர் வடிகட்டி (Water Filters) வழங்கிவைக்கப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ஜெ.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டு கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15 முன்பள்ளிகளுக்கு 25.11.2022 அன்று பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் குடிநீர் வடிகட்டிகளை முன் பள்ளிகளுக்கு வழங்கி வைத்தார்.
சுத்தமான குடிநீரை முன்பள்ளி சிறார்கள் பருக வேண்டும் என்ற உயரிய நோக்கில் குடிநீர் வடிகட்டிகள் வழங்கப்படுகின்றது.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் திரு.ஆ.நவேஸ்வரன், மாவட்ட முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் திரு.வீ.முரளிதரன், கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்,கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.






