30 ஆண்டு வரலாற்றை பூர்த்தி செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் நிறைவினை முன்னிட்டு விசேட நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 09.07.2019 அன்று நடைபெற்றது.
09.07.2019 அன்று நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் இந்த விசேட நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.வீ.குகதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர்.ரீ.கடம்பநாதன், வாழைச்சேனை ஆதார வைத்திய சாலை உளநல மருத்துவர் டாக்டர்.ஜூடி ஜெயகுமார், மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை பொறுப்பதிகாரி திரு.எஸ்.மணிவண்ணன் ஆகியோர் வளதாரிகளாக கலந்து கொண்டு சிறுவர் உரிமைகளும் மேம்பாடும் சட்ட பாதுகாப்பு மற்றும் சிறுவர் நலன்கள் பற்றிய அறிவூட்டல்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.









