WhatsApp Image 2023 01 17 at 21.53.04

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் தமது கடைமைகளை 18.01.2023 அன்று மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுற்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் 17.01.2023 அன்று பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து  தமக்கான நியமன கடிதத்தினை பிரதமரின் கரங்களினால் பெற்றுக் கொண்ட நிலையில் 18.01.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

புதிய அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் மலர் மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டதுடன் மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வர குருக்கள் தலைமையில் விஷேட பூசை நடாத்தப்பட்டு சுபமூர்த்த வேளையில் தனது கடைமையினை பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வுகளில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திரு கே.கருணாகரன் அவர்கள் ஓய்வு பெற்றுச்சென்றதனைத் தொடர்ந்து நிலவிய வெற்றிடத்திற்கு புதிய அரசாங்க அதிபராக திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர் கடந்த 2020 ஆண்டு ஜனவரி தொடக்கம் ஒக்டோடர் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 01 17 at 21.53.04 WhatsApp Image 2023 01 17 at 21.53.06 WhatsApp Image 2023 01 17 at 21.53.07 WhatsApp Image 2023 01 17 at 21.53.06 1

WhatsApp Image 2023 01 17 at 21.53.08 WhatsApp Image 2023 01 17 at 21.53.05 1 WhatsApp Image 2023 01 17 at 21.53.10 WhatsApp Image 2023 01 17 at 21.53.09

WhatsApp Image 2023 01 17 at 21.53.05