
கோறளைபற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் கிராமிய பொருளாதார உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தை மதிப்பீடு செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள் 01.02.2023 அன்று கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்கு விஜயம் செய்தனர்.
இதன்போது வாழைச்சேனை பிரைந்துரைசேனை பிரதேசத்தில் ஷாதுலிய்யா மகா வித்தியாலயத்தின் சிறந்த மரநடுகை, ஓட்டமாவடி மஜ்மா கிராமத்தில் சிறந்த வீட்டு தோட்டம், செம்மன்னோடை பிரதேசத்தில் சிரமதானம் மற்றும் தியவட்டவான் பகுதியில் கிராமிய புத்தெழுச்சி மையம் ஆகியவை பார்வையிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இவ்விஜயத்தில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.சி. புவனேந்திரன் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.






