WhatsApp Image 2023 02 08 at 23.23.41

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு  பிரதேச செயலகத்தினால்  "புதிய நாடு புதிய கிராமம்" எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர்  எஸ் . சுதாகர்  தலைமையில் 08.02.2023 அன்று கரவெட்டி மைதானத்தில் இடம் பெற்றது. இதன் போது பொதுச்சந்தை திறந்து வைப்பு, அதனுடன்  வாழ்வாதார உதவியாக கோழி குஞ்சு மற்றும் மரவள்ளி தடி , மரக்கன்றுகள்  மற்றும்  உலர் உணவு பொதிகள் பயனாளிகளுக்கு  வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட காணிப்பிரிவின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி . நவரூபரஞ்சினி முகுந்தன், AU Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ராஜன் தவசீலன் மற்றும் மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர்  திருமதி சுபா சதாகரன் , நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்எம் றஊப், சமுர்த்தி முகாமையாளர் திருமதி க. வாமதேவன் ,  தேசிய இளைஞர் மன்ற உதவிப் பணிப்பாளர்  மற்றும்  கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர் .மேலும்  அதிகாரிகளினால் மரக்கன்றுகள் நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 02 08 at 23.23.44 WhatsApp Image 2023 02 08 at 23.23.47 WhatsApp Image 2023 02 08 at 23.23.59 WhatsApp Image 2023 02 08 at 23.24.07