WhatsApp Image 2023 06 08 at 03.34.47 1

மட்டக்களப்பு  மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாவட்ட சிறுவர் சபை உறுப்பினர்கள் தெரிவு உதவி மாவட்ட செயலாளர் திரு ஆ.நவேஸ்வரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.06.2023 அன்று இடம் பெற்றது.

சிறுவர் உரிமை மேம்பாட்டு திணைக்களத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் 14 பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட  சிறார்களில் இருந்து சிறுவர் சபைக்கான  உறுப்பினர்களாக தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர் வாக்கெடுப்பு மூலம்   தெரிவு செய்யப்பட்டார்கள்.

சிறார்களின் பங்கேற்பு உரிமையை மேம்படுத்துவதற்கு உதவும் முகமாக இச்சபை செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சிறுவர் உரிமை மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த (AU  Lanka) ஏயூ லங்கா நிறுவனம் இணைத்து செயற்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு ரீ. மதிராஜ், பதவி நிலை உதவியாளர் திரு எம்.ரிலா, ஏயு லங்கா நிறுவன இணைப்பாளர் திரு நந்தகுமார் மற்றும் 14 பிரதேச சிறுவர் மேம்பாட்டு  உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2023 06 08 at 03.34.46 WhatsApp Image 2023 06 08 at 03.34.47 WhatsApp Image 2023 06 08 at 03.34.13 WhatsApp Image 2023 06 08 at 03.34.47 1