WhatsApp Image 2023 06 26 at 01.44.41 1

சர்வதேச போதைப்பொருள் துஸ்பிரயோக தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் திரு ஏ. நவேஸ்வரன் அவர்களின் தலைமையில் 26.06.2023 அன்று மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக ஆரம்பமானது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வில் போதைப் பொருள் புணர்வாழ்வு மையத்தின் இராணுவ அதிகாரியும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். இதன்போது போதை பொருள் பாவனையின் விபரீதங்கள் மற்றும் சிறுவர்களுக்கு விழிப்பூட்டும் கருத்தம்சங்கள் கொண்ட பதாகைகள் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பாதசாரிகள், பயணிகளுக்குமாக விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp Image 2023 06 26 at 01.44.40 WhatsApp Image 2023 06 26 at 01.44.43 WhatsApp Image 2023 06 26 at 01.44.42 1 WhatsApp Image 2023 06 26 at 01.44.42