அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையில் ஜனாதிபதி செயலகம் அமுல்படுத்தும் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மறுபயிர் ஊக்குவிப்பு அடிப்படையில் நிலக்கடலை உற்பத்திச்செய்கை மாவட்ட செயலகத்தின் மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் மேற்பார்வையில் 13 பிரதேச செயலகப்பிரிவில் சுமார் 345 ஏக்கரில் மேற்க்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி செயலகமானது, மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நிலக்கடலை உற்பத்திச்செய்கைக்காக சுமார் 48 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்து, அதனூடாக முழுக்க மானிய உதவியில் 700 விவசாயிகளுக்கு சுமார் 13,600 கிலோகிராம் விதை நிலக்கடலை அன்பளிப்பாக வழங்கியது.

குறித்த நிலக்கடலை அறுவடைவிழாவானது 25/07/2019 வியாழக்கிழமை அன்று ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசெயலாளர் பிரிவின் மாவடியோடை வேப்பவட்டவான் பகுதியில் நடைபெற்றது.

மாவட்ட விவசாய பணிப்பாளர் திரு.வை.வீ. இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்த அறுவடைவிழாவில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் திரு.என்.வில்வரத்தினம், மட்டக்களப்பு விவசாய பிரதிப்பணிப்பாளர் திரு.வீ..பேரின்பராசா, தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் திரு. கே.ஜெ.செகமனசிங்க ,தேசிய உர செயலக உதவிப்பணிப்பாளர் திரு. கே.எல்.எம்.சிறாஜுன் , பிரதேச கணக்காளர் திரு.ஜோ.ஆனந்தராஜ் உட்பட பல அதிகாரிகளும் விவசாயிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

244000012440002224400038244000392440004024400044244000492440004624400051