சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரியும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், இளைப்பாறிய மற்றும் மரணித்த உத்தியோகத்தர்களின் குடும்பங்களும் ஓய்வூதிய நிதியை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துவருகின்றது.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமைபுரியும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், இளைப்பாறிய சமூர்த்தி உத்தியோகத்தர்கள் குடும்பத்திற்கு இந்த ஓய்வூதிய பணத்தை பெற்றுக்கொடுப்பற்கான விசேட கூட்டம் நேற்று 08.08.2019 வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.எ.பாக்கியராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சமூகவலுவூட்டல் அமைச்சின் உதவிபணிப்பாளர் திருமதி.திலினி விஜயரத்ன அவர்களின் தலைமையிலான அதிகாரிகள் குழு இங்கு வருகை தந்து குறித்த திட்டத்தை பற்றி ஆராய்ந்தனர்.
இக்கூட்டத்தில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இளைப்பாறிய உத்தியோகத்தர்களின் குடும்பத்தினர்களும் கலந்துகொண்டனர்.





