மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வாணி விழாவும் ஆயுத பூசையும் நேற்று 08.10.2019 மிக சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவானது மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பான முறையில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.குணநாயகம் ஒழுங்கு செய்திருந்தார். இதற்கான ஆலோசனைகளை மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் திரு.எ.நவேஸ்வரன் ஆகியோர் வழங்கிருந்தனர்.

இவ் விழாவிற்கான பிரதமகுரு சிவசிஸ்ரீ.உ.ஐகதீஸ்வரன் குருக்கள், மாவட்ட செயலகம் மட்டக்களப்பு அவர்களினால் பூசை அலங்காரம், கும்பம் சொரிதல் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது.

வாணி விழாவின் ஆரம்ப நிகழ்வாக சாயி சேவா சங்க உறுப்பினர்களினால் பஐனை பாடல்களும், மட்/வின்சன் பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனம் மற்றும் விநாயகர் துதி, சொற்பொழிவு, பண்னிசை, பாமாலை ஓதல் என பல கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமை சிறப்பான அம்சங்களாகும்.

அரசாங்க அதிபர் உறையாற்றுகையில் இம்மாதமானது மிகவும் பெருமைக்குரிய மாதமாகவே கருத வேண்டும் எனவும் இக்காலத்தில்தான் சிறுவர், முதியோர் வாரமும் நடக்கின்றது அதே காலத்தில்தான் நவராத்திரி விழாவும் இடம்பெறுவது சிறப்புக்குரிய அம்சமாகவே கருதுவதாகவும் நவராத்திரி தொடர்பான கருத்துக்களையும் வழங்கி செயலகத்தின் பணியாற்றும் எல்லா மதங்களை பின்பற்றுபவர்களும் கலந்து சிறப்பித்தமையை பாராட்டினார்.

வாணி விழாவுடன் இம்முறை ஆயுத பூசையும் கும்பம் சொரியும் நிகழ்வும் இம்முறை சிறப்பாக நடந்தேறியது இவ் விழாவில் பங்கேற்று நடனம் நாட்டியம் பண்ணிசை பேச்சு சொற்பெழிவு ஆற்றியோருக்கு பரிசில்களும் சான்றிதல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு 1ம் ஆண்டில் கல்வி கற்கவிருக்கின்ற சில மாணவ சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களும் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டது.

DSC 0173 resizedCSC 0085 resizedDSC 0001 resizedDSC 0005 resizedDSC 0010 resizedDSC 0029 resizedDSC 0054 resizedDSC 0055 resizedDSC 0057 resizedDSC 0096 resizedDSC 0188 resizedDSC 0120 resizedDSC 0139 resized