சுற்றாடலில் ஏற்படும் பாதிப்புக்களை தீர்த்துவைக்கவும் மற்றும் சுற்றாடலை பாதுகாக்கும் முகமாகவும் கலந்துரையாடும் கூட்டம் 22.10.2019 அன்று காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இம் மாவட்டத்தில் எதிர்நோக்கும் சுற்றாடல் பிரச்சனைகள் விபரமாக ஆராயப்பட்டதுடன் எதிர் காலத்தில் இம் மாவட்டத்தில் சுற்றாடல் தொடர்பில் எதிர்நோக்கும் சவால்களுக்கு அதிகாரசபை, பிரதேசசெயலகம், உள்ளுராட்சிமன்றம், சுற்றாடல் வளர்ச்சியில் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள் கவனம் செலுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் பற்றியும் ஆராயப்பட்டது.
மத்தியசுற்றாடல் அதிகாரசபை உதவிப்பணிப்பாளர் திரு.கே.கோகுலராஜ் அவர்கள் இம் மாவட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை விபரமாக எடுத்துரைத்தார். அத்துடன் கரையோரம்பேணல் திணைக்களம், சுகாதார திணைக்களம், உள்ளுராட்சி சபைகள் என்பன எதிர்நோக்குகின்ற சுற்றாடல் பிரச்சனைகளை எடுத்து நோக்கி அதற்குரிய தீர்வுகள் எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட அரச திணைக்கள தலைவர்கள், உள்ளுராட்சி தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டனர்.





