மட்டக்களப்பில் பருவகால நிலையினால் ஏற்படுகின்ற அனர்த்தம் சம்பந்தமான முன்னாயத்த ஒழுங்குபடுத்தல் கலந்துரையாடல் கடந்த 24.10.2019 காலை 9.00 மணியளவில் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் திரு.சதுர லியனாராச்சி மற்றும் உலக உணவு திட்டத்தின் பொறுப்பதிகாரி திரு.என்.ஐ.ஹட்டியராய்ச்சி, மத்திய நீர்ப்பாசன திணைக்கள பிரதம பொறியியலாளர் திரு.ஆர்.ரஜனி மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் திரு.எ.சி.எம்.சியாத், மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திரு.ஆர்.சசீலன் ஆகியோருடன் முப்படைகளின் அதிகாரிகள் அனர்த்த நிவாரன சேவை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் வட-கிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலையினால் மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இப்பாதிப்புக்களில் இருந்து மக்களை பாதுகாத்தல் மற்றும் தெளிவூட்டல் செயற்திட்டங்களை மக்கள் மத்தியில் முன்கொண்டு செல்வது அதனோடு நோய்த்தடுப்பு தொடர்பான விடயங்களில் கூடிய கவனத்தினை மக்கள் மத்தியில் செலுத்தும் படியான அவதானிப்புகளை மேற்கொள்ளல், டெங்கு நோய்தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அதிகளவில் பாதிப்புகளுக்குள்ளாகும் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கான முன்னாயத்த நிவாரனப்பணிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாகவும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

DSC 0820 resizedDSC 0809 resizedDSC 0813 resizedDSC 0829 resizedDSC 0831 resized