DSC 0961 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் கலையை வாழ வைக்கும் நோக்கில் கண்ணகி கலை இலக்கியக்கூடல் நடாத்தும் கண்ணகி கலை இலக்கிய தொடக்க விழா 22.12.2019 அன்று காலை 9.15 மணியளவில் கல்லடி துளசி மண்டபத்தில் பேராசிரியர் சே.யோகராசா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் உரையாற்றும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைத்துறைகள் பெரிதும் வளர்ச்சி அடைய கண்ணகி கலை இலக்கியக்கூடல் முன்னுரிமை காட்டி வருகின்றது. கலாச்சார திணைக்களம், பிரதேச செயலகங்கள் மற்றும் கலை கழகங்கள் தமது பாரம்பரிய கலைகளிலும், கலை இலக்கியங்களிலும் மிகுந்த அக்கறை காட்டிவருகின்றன. அந்த வகையில் கண்ணகிக்கு இங்கு விழா எடுப்பதனை பாராட்டுகின்றேன் என தெரிவித்தார்.

கலை நிகழ்வுகளில் பங்கேற்ற சிறுவர்களுக்கு பாராட்டி அதிதிகளால் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு .வி.வாசுதேவன், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியலாளர் திருமதி.கலைவாணி வன்னியசிங்கம், கிழக்கு பல்கலைக்கழக வளாக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட் தந்தை ஆ.நவரத்தினம் நவாஜீ ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

DSC 0961 resizedDSC 0953 resizedDSC 0965 resizedDSC 1011 resizedDSC 0991 resizedDSC 0992 resizedDSC 0996 resizedDSC 1007 resizedDSC 0982 resized