dengue resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 03 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 17 ஆந் திகதிவரையும் 248 பேர் டெங்குநோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

இந்தவாரம் டெங்குநோய் தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 36 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது போன்று ஆரையம்பதி 51 பேர், களுவாஞ்சிகுடி 20 பேர், வாழைச்சேனை 41 பேர், செங்கலடி 29 பேர், காத்தான்குடி 16 பேர், ஏறாவூர் 16 பேர், வெல்லாவெளி 03 பேர், வவுணதீவு 01 நபர், பட்டிப்பளை 05 பேர், ஓட்டமாவடி 07 பேர், கோரளைப்பற்று மத்தி 17, கிரான் 06 பேர் ஆகிய பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிபனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.