25640045இலங்கை அரசின் நிதியில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கெளரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டுதலில் சமூக வலுவூட்டல் அமைச்சர் கெளரவ ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் நெறிப்படுத்துதலில் யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு 450 வீடுகளை அமைக்க தீர்மாணிக்கப் பட்டுள்ளது.

இந்த விசேட திட்டத்தின் கீழ் இம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 250 வீடுகள் புதிததாக நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த முதலாம் கட்ட வீடமைப்புத்திட்டத்தை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலை கிராமத்தில் நடைபெற்றது. இதில் ஒரு பயனாளிக்கான வீடமைப்பு நிர்மனப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 22.02.2020 வைபவ ரீதியாக இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கெளரவ அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய வீடமைப்பு நிர்மானப்பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்த வைத்தார். இந் நிகழ்வில் மட்டக்களப்ப மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் கௌரவ அதிதயாக கலந்து கொண்டார்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இந்த வீட்டமைப்புத் திட்டத்தின் செயற்பாட்டு கம்பனி நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.றுஸ்லன் நிகிரின், தோட்ட உட் கட்டமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு.கே.விமலநாதன், மாவட்ட காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூப ரஞ்சினி முகுந்தன், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.கே.வில்வரத்னம் மற்றும் பிரதேச செயலாளர்கள் உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு 12 இலட்சத்து எண்பதனாயிரம் ரூபா பெறுமதியான வீடொன்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன் இம் மாவட்டத்தில் தலா 12 இலட்சத்து எண்பதனாயிரம் ரூபா பெறுமதியான 250 புதிய தொழில் நுட்ப முறையிலான பனல் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

இங்கு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் கருத்து வெளியிடுகையில் எனது சேவையில் வடக்கு கிழக்கு என்ற பேதம் ஒரு போதும் காட்டுவதில்லை. அந்த அடிப்படையில் வடக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் அக்கரை காட்டுவது போல் எனது கிழக்கு மாகாண மக்களின் தேவைகளுக்கும் என்னாலான பணிகளைச்செய்யக்காத்திருக்கின்றேன். ஆரம்பித்து வைக்கப்படும் இந்த வீட்டுத் திட்டம் எதிர் வரும் மார்ச் 25ம் திகதிக்குள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும். இதன் பின்னர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 6 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படும்.

இப் பிரதேச மக்களின் அதி முக்கியப் பிரச்சினையான கிரான் பாலத்தை அபிவிருத்தி செய்து தருமாறு கேட்கப்பட்டது. இதற்கு சுமார் 1,500 மில்லியன் ரூபா தேவைப்படுவதால் இதனை எனது அமைச்சின் மூலம் செயல் படுத்த முடியாது. இருந்தாலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களிடம் இந்த பிரச்சினையை கவனத்தில் கொண்டு சென்று இதனைத் தீர்த்து வைப்பேன். சகல இன மக்களையும் சமமாக மதித்து செயற்படுவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

25640045256400472564004925640050256400542564005625640058