போதைப் பொருள் தடுப்பு வாரம் 23ம் திகதி ஜுன் முதல் 1ம் திகதி ஜுலை வரைக்கும் நாடு முழுவதுமாக நடத்துவதற்கான ஏற்பாட்டினை அரசு மேற்கொண்டு வருகின்றது அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு வாரத்தினைச் சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான முன்னாயத்தங்களை அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கு அமைவாக 21.06.2019 மதியம் 2.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட போதைத் தடுப்பு பிரிவினரும் அதனோடு இணைந்த திணைக்களங்களும் கலந்து கொண்டன. இதில் மாவட்டச் செயலகத்தினாலும் பிரதேச செயலகங்களினாலும் மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று விழிப்புணர்வுகளையும், பேரணிகளையும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் மக்களை விழிப்படையச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவற்றிக்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்கள், பல்கலைகழக மாணவர், அரசாங்க திணைக்களங்கள் மற்றும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் போன்ற இடங்களை விசேடமாக வீடு வீடாகவும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீதி நாடகங்கள், விவாதப்போட்டிகள், ஆக்கப்போடிகள், சித்திரப்போட்டிகள், நடை பவனிகள் எனப் பல்வேறுபட்ட நிகழ்சிகள் நடாத்துவதுடன் போதைப் பொருளைத் தடுப்பதற்கான சட்டங்களை வகுத்தலும் அமுல்படுத்தலும் மது ஓழிப்பு நடவடிக்கையும் புணர் வாழ்வழித்தலும் என்ற கருப்பொருளுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.





