மட்டக்களப்பு  மாவட்ட செயலகம் ஏற்பாடு  செய்திருந்த தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் மாவட்ட நிகழ்வு மட்டக்களப்பு நகர காந்தி பூங்காவில் 02/07/2019 மாலை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

போதைப்பொருளை தடுப்போம் என்ற ஜனாதிபதி செயலக சத்தியப்பிரமாணம் இங்கு கலந்துகொண்ட பெருமளவு அரச பணியாளர்கள், மற்றும் பொதுமக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், போதைப்பொருள்  பாவனையைத் தடுக்கும் பத்தாயிரம் கையொப்பங்கள் பெறும் செயற்பாடும் இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இத்துடன் போதை ஒழிப்பு தொடர்பான விளம்பர  பலகை நடுதல், வீதி நாடகமும் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம கணக்காளர் திரு.கே.ஜெகதீஸ்வரன், உதவி மாவட்டசெயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன்,  மட்டக்களப்பு நகர முஸ்லிம் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவரும் பிரபல வர்த்தகருமான திரு.கே.எம்.கலீல் மற்றும் திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

DSC 0864 Copy FILEminimizerDSC 0958 FILEminimizerDSC 0894 FILEminimizerDSC 0880 FILEminimizer