WhatsApp Image 2023 09 19 at 11.12.06

சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கடற்கரை கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மேம்பாடு, போதையற்ற சமூகக்தினை உருவாக்குதல், கரையோர சுத்தம் பேணல், சுயதொழிலை முன்னேற்றல் ஆகிய சமூக நல இலக்குகளை நோக்காகக் கொண்டு மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தினால் இவ்விளையாட்டு விழா மற்றும் சாலையோர உணவுக்கடைகளும் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வு எதிர்வரும் 27,28,29 ஆந் திகதிகளில் மட்டக்களப்பு, கல்லடி கடற்கரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 09 19 at 11.12.06