- Details
- 490views

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒன்றியம், நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமேரிக்க நாட்டின் உதவியில் மாவட்ட மட்டத்தில் புதிய திட்டங்களை அமுல்படுத்தவுள்ளது. பதவியிலிருக்கும் அரசாங்கம் விரும்புகின்ற நல்லிணக்கம், சகவாழ்வு, சமூக அபிவிருத்தி போன்ற திட்டங்களை கிராம மட்டத்தில் அமுல்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இதற்கமைய மாவட்ட ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் செயல்படும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஊடாக இந்த சகவாழ்வு நல்லிணக்கத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
- Details
- 528views

மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60 ஆண்டு நிறைவு வைரவிழா அண்மையில் மட்டக்களப்பு ரோட்டரி நிலையத்தில் ரோட்டரிக் கழகத்தின் நடப்பாண்டு தலைவர் வைத்திய கலாநிதி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
- Details
- 870views

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நாட்டைக் கட்யெழுப்பும் சுவீட்சமான நோக்கு எனும் எண்ணக்கருவுக்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர் காலம் எனும் திட்டத்திற்கமைய கிராமத்திற்கு ஒரு வீடு எனும் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலக பிரிவின் சந்திவெளி பிரதேசத்திலும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவின் ஐயங்கேணிப் பிரதேசத்திலும் தலா ஆறு இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இரு வீடுகள் 18.06.2020 அன்று பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
- Details
- 734views

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் இம்மாவட்டத்தில் முற்கூட்டியே நெல் விதைப்பு இடம் பெற்று ஏனைய மாவட்ட விவசாயிகளுக்கு முன்னர் நெல் அறுவடை செய்யப்படுவதால் இச் சிறுபோகத்தில் நெல் கொள்வனவினை தற்பொழுது அறுவடை தொடங்கியுள்ள காலத்திலேயே மேற் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து 20.06.2020 முதல் இம் மாவட்டத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியங்களூடாக கொள்வனவு செய்வதற்கு இச் சபையின் தலைவர் அனுமதி வழங்கியிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.
- Details
- 824views

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுவீட்சமான நோக்கு எனும் எண்ணக்கருவுக்கமைய உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர் காலம் எனும் திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவின் பிறைந்துரைச் சேனையில் நிறுவப்பட்டுள்ள தலா ஆறு அரை இலட்சம் ரூபா பெறுமதியான புதிய இரு வீடுகள் 16.06.2020 அன்று பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.





