DSC 0484 resized

பொதுத் தேர்தல் 2020 இற்கான அஞ்சல் மூல வாக்களிப்பு 14, 15ம்   திகதிகளில் நடைபெறவிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றவுள்ள அஞ்சல் வாக்கு மேற்பார்வை உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சி வகுப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 13.07.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

DSC 0455 resized

பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ணர் கோவில் புனருத்தாரண திருப்பணிகள் தொடர்பான விபரங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர்கள் மாநாடு 12.07.2020 அன்று காலை 11 மணியளவில் ஸ்ரீ ராமகிருஸ்ண மிஸன் மட்டக்களப்பு கல்லடியில் பொது முகாமையாளர் சுவாமி தக்ஸயானந்தா தலைமையிலும், உதவிப்பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தருடன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது.

DSC 0319 resized

மகளிர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் நிறுவப்பட்டுள்ள முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையம் மற்றும் பகல் பராமரிப்பு வசதிக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 10.07.2020 அன்று சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.

DSC 0390 resized

மகாவலி கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் உலக வங்கி நிதி உதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட மறுவயல் பயிர்களின் உற்பத்தியின் அறுவடைகள் வைபவ ரீதியாக தற்பொழுது நடைபெற்று வருகிறது.

DSC 0273 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வெளிநாட்டு நிதி உதவியுடனான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 09.07.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.