- Details
- 396views

கிராம மட்டத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், உளவளத்துனை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள் 30 பேர் கொண்டு அமைக்கப்பட்ட சமூக சேவைகள் பணி அணி கடந்த 2018,2019 காலப்பகுதியில் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவில் செயற்படுத்தப்பட்டது.
- Details
- 324views

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020-2021 காலப்பகுதிக்கான பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ள 67 ஆயிரத்தி 932.1 ஹெக்டேயர் வயல் நிலங்களிற்கான மானிய உரத்தினைப் பெற்றுக் கொடுக்கத் தேவையான முன்மொழிவு விவசாய அமைச்சின் தேசிய உரச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தெரிவித்தார்.
- Details
- 458views

காத்தான்குடியில் இயங்கிவரும் சிவில் சமுக அமைப்பாகிய பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர். திருமதி கலாமதி பத்மராஜா அவர்களுக்கு வரவேற்பழிக்கும் நிகழ்வொன்று 17.08.2020 அன்று மாலை காத்தான்குடி சம்மேளனக் கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற இரு சமுகத்தினையும் எனது மாவட்ட மக்களாகவே பார்கின்றேன் என அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.
- Details
- 525views

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் புராதனமானதும் பழமையானதுமான ஆயித்தியமலை புனித திருத்தலமான சதாசகாயமாதா திருத்தல திருவிழா எதிர்வரும் 28-08-2020 அன்று ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் 17/08/2020 அன்று மட்டக்களப்பு சால்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் பங்குதாரர்களுடனான விசேட கலந்துடையாடல்
- Details
- 485views

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று புன்னக்குடாவில் அமைக்கப்படவுள்ள புடவைக்கைத்தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கான பங்குதார்கள் கலந்து கொள்ளும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்ராஜா அவர்கள் தலைமையில் 13.08.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.





