DSC 0074 resized

மட்டக்களப்பு மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் வழிகாட்டலில்  மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு மட்டு முயற்சியான்மை 2020 எனும் விசேட திட்டம் மாவட்ட ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் செயற்பட்டு வருகின்ற சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சியினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் 26.08.2020 அன்று பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

DSC 0978 resized

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவிவுகளிலும் கடமையாற்றி வருகின்ற பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 25.08.2020 அன்று மண்முனை தென்எருவில் பற்று – களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

05 resized

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் போதைப் பொருள் அற்ற சமுகம் சௌபாக்கிய தேசம் எனும் தொனிப் பொருளில் அரச உத்தியோகத்தர்களை பயிற்றுவிக்கும் தேசிய வேலைத்திட்டம் நாடுபூராகவும் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமைபுரியும் சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய உத்தியோகத்தர்களையும் இணைத்து போதைப் பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்பான மூன்று நாள் பயிற்சிகள் வழங்கி வைக்கப்பட்டன.

DSC 0919 resized

மட்டக்களப்பில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தினைக் குறைப்பதற்கு முந்தானை ஆற்றினை மையப்படுத்திய புதிய திட்டம் உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக பங்காளர்களை தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வு ஒன்று மத்திய நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு.கே.டீ.என். ஸ்ரீவர்தன தலைமையில் 22.08.2020 அன்று மட்டக்களப்பு ஈஸ்ட் லெகூன் ஹோட்டலில் இடம்பெற்றது.

13 resized

மட்டக்களப்பு மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் வழிகாட்டலில் மாவட்டத்தில் செயற்பட்டுவருகின்ற சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் மட்டு முயற்சியான்மை 2020 எனும் விசேட திட்டம் மாவட்டரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.