DSC 0391 resized

பிரதேச மட்டத்தில் செயற்படுகின்ற சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு அனர்த்தங்களின் பொழுது சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை குறைப்பது தொடர்பாக விசேட பயிற்சி நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 13.08.2020 அன்று கல்லடி கிரீன் காடன் ஹோட்டலில் இடம்பெற்றது.

DSC 1007 resizedபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்காக வாக்கெண்ணும் பணிகளில் ஈடுபடும் பிரதான வாக்கெண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 03.08.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

DSC 0917 resizedபாராளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆந் திகதி நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் இத்தேர்தலில் பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமையினை சரியாகப் பயன்படுத்தவேண்டுமென மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்ட செயலகத்தில் 31.07.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DSC 0970 resizedபொதுத் தேர்தல் 2020 இற்கான வாக்களிப்பு தினம் எதிர்வரும் 05 ஆந் திகதி நடைபெறவிருக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமுகமான தேர்தலினை நடாத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 03.08.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

DSC 0859 resizedபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்காக வாக்கெண்ணும் பணிகளில் ஈடுபடும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 29.07.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றது.