- Details
- 518views
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் வேலையற்ற ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான பல்நோக்கு தொழிற்பயிற்சி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுத்து வரப்படுகின்றது. இதனடிப்படையில் மட்டக்களப்பில் 4452 இளைஞர் யுவதிகள் இப்பயிற்சியினைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். இவ்விண்ணபதார்கள் அவர்களின் திறமைகள், தகுதிகள் மற்றும் இலட்சியங்களுக்கேற்ப விண்ணப்பித்த துறைகளுக்கமைவாக தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினூடாக வழங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
- Details
- 522views

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கான புதிய சுற்றுலாத்துறை திறன் மூலோபாயம் மற்றும் செயல்திட்டம் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 15.07.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 500views
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜூலை 03 ஆந் திகதி தொடக்கம் 10 ஆந் திகதி வரையும் 13 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 08 டெங்கு நோயாளர்களும், ஏறாவூர் மற்றும் கோரளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 02 நோயாளர்களும், ஆரையம்பதி பிரிவில் ஒரு நோயாளருமாக மொத்தம் 13 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் வாகரை, வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
- Details
- 526views

பொதுத் தேர்தல் 2020 இற்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 15.07.2020 அன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டது.பிரதி தேர்தல் ஆணையாளர்களான திரு.எம்.எம்.எஸ்.கே. பண்டார, திரு.எஸ். அட்சுதன் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையிலான தேர்தல் கடமை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் குழுவினை 15.07.2020 அன்று மாவட்ட செயலகத்தில் சந்தித்து தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் பற்றி கலந்துரையாடினர்.
- Details
- 597views

எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்ட வாக்களிப்பு 14.07.2020 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது. இதன்படி மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்கள், மற்றும் அரச திணைக்களங்களின் மாவட்ட மற்றும் பிரதேச அலுவலகங்களிலும் இந்த வாக்களிப்பு நடைபெற்றது. இதன்போது பொது சுகாதார துறையினர் சுகாதார முறைகளை கவனிக்கும் பணிகளில் ஈடுபாடு காட்டினர்.





