DSC 0988 resized

மட்டக்களப்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குடி நீரினைப் பயன்படுத்தும் பொதுமக்கள் வேறு தேவைகளுக்குமாக குடிநீரைப் பயன்படுத்துவதனைத் தவிர்த்து சிக்கனமாக குடி நீரினைப் பயன்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் 04.05.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நீர் வளத்தினை முகாமைத்துவம் செய்து உன்னிச்சைக் குளத்திலிருந்து விவசாயத்திற்கும் குடிநீருக்குமாக நீரினை பங்கீடு செய்தல் தொடர்பான விசேட கூட்டத்தில் தெரிவித்தார். 

 

DSC 1022 resizedமட்டக்களப்பில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் உள்ளுராட்சி சபைகள் தொற்று நீக்கல் விசிறல் முதல் மக்கள் ஒன்று கூடும் சந்தை போன்ற இடங்களை முகாமைத்துவம் செய்வது வரையிலான அனைத்து விடயங்களிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமலிருக்க இவர்களின் பங்களிப்பு மேலானது எனவும் பாராட்டப்படவேண்டியது எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தெரிவித்தார். 

DSC 0967 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினைத் தவிர்க்கும் முகமாக தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வறிய குடும்பங்களுக்கும், மட்டக்களப்பில் இயங்கி வரும் சிறுவர் இல்லங்கள், விசேட தேவையுடையோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்குமாக  அரசாங்கத்தின் வேண்டுகோளில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி கொடுப்பனவில் மோசடி செய்ததாக சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் கடந்த 24.04.2020 முதல் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கமைய சமுர்த்தி பணிப்பாளர்  நாயகத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

DSC 0910 resized

காத்தான்குடி தள வைத்தியசாலையில் இயங்கிவரும் கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்தின் பாவனைக்கு மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கிராம அமைப்பினரால் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தற்காப்பு உபகரணங்கள் 01.05.2020 அன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களினால் பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் எம். அச்சுதனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.