DSC 0510 resized

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் விவசாயப்பிரிவு நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய நவீனமயக்கால் திட்டங்களை மீளாய்வு செய்யும் மாகாண திட்ட வழிநடாத்தல் குழுக்கூட்டம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு துசிதபீ வனிகசிங்க தலைமையில் மட்டக்களப்பு நீர்பாசனத்திணைக்கள மாகாணப்பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் 21.05.2020 அன்று இடம்பெற்றது.

DSC 0290 resized

கொரோனா வைரஸ் பாதிப்பில் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு பிரதேசசெயலாளர் திரு.எஸ்.சுதாகரன் தலைமையில் 20.05.2020 புதன்கிழமை அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பணியில் உதவிப் பிரதேசசெயலாளர் திருமதி சுபா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.கலைச்செல்வி வாமதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் மேற்பார்வை கடமையில் ஈடுபட்டனர்.

DSC 0453 resized

நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படாதிருக்க முன்கூட்டியே அரசாங்கம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் எண்ணக்கருவில் தற்சார்பு பொருளாதார அபிவிருத்திக்கு ஆர்வமூட்டி ஆரோக்கிய உணவை தமது வீடுகளிலேயே பெற்றுக் கொள்ளவும், கொரோனா போன்ற தொற்றுக்களில் தவிர்ந்து கொள்ளவும் ஆரோக்கிய உணவும் அழகிய வாழ்வும் திட்டம் 2020 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

DSC 0433 resized

பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சு நவீன தொழிநுட்பத்துடன் விவசாயத்தில் ஈடுபாடு காட்டிவருகின்ற விவசாயிகளுக்கு உலகவங்கியின் உதவி வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை ஊக்கப்படுத்த மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

DSC 0404 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிகை அலங்காரம் மற்றும் அழகுக் கலை நிலைய தொழில் புரிபவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் வேண்டுகோளில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் செயற்படுகின்ற தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.